​​ தெற்கு சூடானில் சிறிய ரக விமானம் ஆற்றில் விழுந்த விபத்தில் 21 பேர் பலி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தெற்கு சூடானில் சிறிய ரக விமானம் ஆற்றில் விழுந்த விபத்தில் 21 பேர் பலி

தெற்கு சூடானில் சிறிய ரக விமானம் ஆற்றில் விழுந்த விபத்தில் 21 பேர் பலி

Sep 09, 2018 7:05 PM

தெற்கு சூடானில் சிறிய ரக பயணிகள் விமானம் ஆற்றில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.

19 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானமானது தலைநகர் ஜூபாவில் இருந்து யிரோல் நகருக்கு புறப்பட்டது. யிரோல் நகரை நெருங்கிய விமானமானது திடீரென ஆற்றில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 6 வயது குழந்தை உள்பட 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டு இருப்பதாகவும், ஆனால் அவர்களும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதிகளவில் ஆட்களை ஏற்றிச் சென்றதும் ஒரு காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.