​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலகிலேயே உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை அக்.31ல் பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்கிறார்

Published : Sep 09, 2018 5:55 PM

உலகிலேயே உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை அக்.31ல் பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்கிறார்

Sep 09, 2018 5:55 PM

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் உலகிலேயே உயரமான சர்தார் வல்லபாய் படேலின் சிலையை அக்டோபர் 31 ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்க இருக்கிறார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி,  நாட்டின் ஒற்றுமையை குறிப்பிடும் சின்னமாக 182 மீட்டர் உயரத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்கப்படுவதாக கூறினார். இந்த சிலை அமைப்பதற்காக இரும்பு, மண் மற்றும் தண்ணீர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31 ஆம் தேதி சிலையை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்க இருப்பதாக விஜய் ரூபானி தெரிவித்தார். சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் படேல் சிலை அமைக்கப்படுகிறது.