​​ ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளி வென்ற தருண் அய்யாசாமிக்கு அவினாசியில் உற்சாக வரவேற்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளி வென்ற தருண் அய்யாசாமிக்கு அவினாசியில் உற்சாக வரவேற்பு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளி வென்ற தருண் அய்யாசாமிக்கு அவினாசியில் உற்சாக வரவேற்பு

Sep 09, 2018 4:48 PM

ஆசிய விளையாட்டுப்போட்டியில் 2 வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண் அய்யாசாமிக்கு திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவினாசி ராவுத்தர்பாளையத்தைச் சேர்ந்த தருண் அய்யாசாமி, இந்தோனேசியாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, தடகளப் பிரிவில் 2 வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றினார். இதையடுத்து, சொந்த ஊரான அவினாசிக்கு திரும்பிய அவருக்கு பொதுமக்கள் பட்டாசு வெடித்து, மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தருண் அய்யாசாமிக்கு நகைக்கடை அதிபர் ஒருவர், ஒரு சவரன் தங்க மோதிரத்தை பரிசாக அணிவித்தவுடன், ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு, லிங்கேஸ்வரர் கோயிலில் பரிவட்டம் கட்டி, மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தியாவிற்கு பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.