​​ 2017 - 2018ல் ரயில் விபத்துகள், உயிரிழப்புகள் எண்ணிக்கை குறைவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2017 - 2018ல் ரயில் விபத்துகள், உயிரிழப்புகள் எண்ணிக்கை குறைவு

2017 - 2018ல் ரயில் விபத்துகள், உயிரிழப்புகள் எண்ணிக்கை குறைவு

Sep 09, 2018 4:23 PM

2017 -  2018 ஆம் ஆண்டில் நிகழ்ந்த ரயில் விபத்துகள், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள், அதற்கு முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும் போது வெகுவாக குறைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2017 செப்டம்பர் முதல் 2018 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்த 75 ரயில் விபத்துகளில், 40 பேர் பலியாகியுள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டில் 80 ரயில் விபத்துகளும், 249 உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. அதே போன்று ஆளில்லா ரயில்வே கடவுப் பாதைகளில் ஏற்பட்ட விபத்தும் இதே காலகட்டத்தில் கணிசமாக குறைந்துள்ளது.

2020 ஆம் ஆண்டுக்குள் ஆளில்லா கடவுப் பாதைகளை முற்றிலுமாக நீக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ள நிலையில் 2017 - 2018  காலகட்டத்தில் 1565 ஆளில்லா கடவுப் பாதைகள் நீக்கப்பட்டுள்ளன.

சிறப்பான தண்டவாளம், எல்எச்பி முறையிலான நவீன ரயில் பெட்டிகள், பராமரிப்பில் கவனம் செலுத்தியது போன்ற காரணங்களால் கடந்த 4 ஆண்டுகளில் தொழில்நுட்ப குறைபாடால் நிகழும் ரயில் விபத்துக்கள் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.