​​ மே 6ஆம் தேதி நடைபெறுகிறது மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மே 6ஆம் தேதி நடைபெறுகிறது மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு

Published : Jan 23, 2018 11:00 AM

மே 6ஆம் தேதி நடைபெறுகிறது மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு

Jan 23, 2018 11:00 AM

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, வரும் மே 6-ஆம் தேதி நடத்தப்படுமென சி.பி.எஸ்.இ. எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான இடங்களை, தகுதித்தேர்வு மற்றும் தேசிய நுழைவுத்தேர்வின் அடிப்படையில்தான் நிரப்ப வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், கடந்த ஆண்டு நீட் தேர்வின் அடிப்படையில் இடங்கள் நிரப்பப்பட்டன.

நீட் தேர்வில் மாநில பாடத்திட்டம் சேர்க்கப்பட வேண்டுமென தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் வலியுறுத்தலின்படி, அவற்றை பரிசீலிப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், 2018 – 19-ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு, வரும் மே 6- ஆம் தேதி நடைபெறுமென, மாநிலக் கல்வி வாரியங்களுக்கு, சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தகவல் அனுப்பியுள்ளது.

இந்த ஆண்டின் நீட் தேர்வில், சி.பி.எஸ்.இ. மற்றும் மாநிலப் பாடத்திட்டத்தை ஒருங்கிணைத்து கேள்விகள் கேட்கப்படும் என்றும், மாநில பாடத்திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்துள்ளார்.