​​ அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர் பற்றாக்குறை ஏதுமில்லை - KP அன்பழகன் தகவல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர் பற்றாக்குறை ஏதுமில்லை - KP அன்பழகன் தகவல்

அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர் பற்றாக்குறை ஏதுமில்லை - KP அன்பழகன் தகவல்

Sep 09, 2018 3:46 PM

அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை ஏதுமில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.

சேலம் இரும்பாலை மனமகிழ் முத்தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.பி.அன்பழகன்,
உயர் கல்வித்துறையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் கால தாமதம் ஏற்படுகிறதே தவிர, பற்றாக்குறை ஏதுமில்லை என்று தெரிவித்தார்.