​​ உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சங்கரநாராயணர் கோவிவில் மாவட்ட நீதிபதி ஆய்வு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சங்கரநாராயணர் கோவிவில் மாவட்ட நீதிபதி ஆய்வு

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சங்கரநாராயணர் கோவிவில் மாவட்ட நீதிபதி ஆய்வு

Sep 09, 2018 3:43 PM

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துத் திருநெல்வேலி மாவட்ட நீதிபதி ராஜசேகர் ஆய்வு செய்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்துத் தமிழகத்தில் உள்ள கோவில்களின் பாதுகாப்புக் குறித்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. அந்த உத்தரவுப்படி திருநெல்வேலி மாவட்ட நீதிபதி ராஜசேகர், சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் ஆய்வுசெய்தார்.

கோவில் வளாகத்தில் பக்தர்களுக்குச் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார்.  கோவில் யானை முறையாகப் பராமரிக்கப்படுகிறதா, அதற்கு உணவு வழங்கப்படுகிறதா என்பது பற்றியும் கேட்டறிந்தார். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி ராஜசேகர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கோவில்களையும் ஆய்வுசெய்த பின் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.