​​ 7பேரை விடுவிக்கும் முடிவு ஆளும் அரசின் கைகளிலேயே உள்ளது - EVKS இளங்கோவன் கருத்து
Polimer News
Polimer News Tamil.
Advertisement
7பேரை விடுவிக்கும் முடிவு ஆளும் அரசின் கைகளிலேயே உள்ளது - EVKS இளங்கோவன் கருத்து

7பேரை விடுவிக்கும் முடிவு ஆளும் அரசின் கைகளிலேயே உள்ளது - EVKS இளங்கோவன் கருத்து

Sep 09, 2018 3:38 PM

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனைபெற்ற 7பேரை விடுவிப்பது ஆளும் அரசின் கைகளிலேயே உள்ளது எனக் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது 7பேரை விடுவிப்பது குறித்துக் காங்கிரசின் நிலைப்பாடு என்ன எனச் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிகளை மன்னித்துவிட்டோம் என சோனியாகாந்தியும் ராகுல்காந்தியும் தெரிவித்ததை அவர்  நினைவுகூர்ந்தார். விடுவிப்பது பற்றிய முடிவு ஆளும் அரசின் கைகளிலேயே உள்ளது என்றும் இளங்கோவன் தெரிவித்தார்.