​​ நாமக்கலில் குடோனில் தீப்பற்றியதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான அட்டைகள் சாம்பல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாமக்கலில் குடோனில் தீப்பற்றியதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான அட்டைகள் சாம்பல்

நாமக்கலில் குடோனில் தீப்பற்றியதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான அட்டைகள் சாம்பல்

Sep 09, 2018 3:00 PM

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அட்டை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

புத்தர் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், பழைய அட்டைகளை வாங்கி புதிய அட்டை தயாரிப்புக்கான மறுசுழற்சிக்காக விற்பனை செய்து வருகிறார். அதே தெருவில் உள்ள குடோனில் இவற்றை இருப்பு வைத்திருந்தார். இன்று குடோனிலிருந்து புகை வெளியேறியதை அக்கம்பக்கத்தினர் பார்த்தனர். சிறிது நேரத்தில், நெருப்பு பற்றி எரிந்து அப்பகுதி முழுவதும் அனல் பரவியது. புகைமூட்டமும் சூழ்ந்தது.

குமாரபாளையம், பவானி, சங்ககிரி ஆகிய இடங்களிலிருந்து தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்ட போதும், தீப்பற்றிய இடம் குறுகிய சந்து என்பதால் உள்ளே செல்வதில் சிரமம் ஏற்பட்டது. 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுப்படுத்தப்பட்டது. விபத்தில், குடோனில் இருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான அட்டைகள் சாம்பலாகின. விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.