​​ தமிழகம் - புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகம் - புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

Published : Sep 09, 2018 2:56 PM

தமிழகம் - புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

Sep 09, 2018 2:56 PM

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரில் 5 சென்டி மீட்டரும், அரியலூரில் 3 சென்டி மீட்டரும் மழை பெய்துள்ளது. சென்னையைப் பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.