​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாகர்கோவில் ரயில் நிலையத்தில், ரயில் எஞ்சின் தடம் புரண்டதால், வெளியூர் செல்லும் ரயில்கள் தமாதம்

Published : Mar 14, 2018 3:13 PM



நாகர்கோவில் ரயில் நிலையத்தில், ரயில் எஞ்சின் தடம் புரண்டதால், வெளியூர் செல்லும் ரயில்கள் தமாதம்

Mar 14, 2018 3:13 PM

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கோவை பயணிகள் ரயில் எஞ்சின் தடம் புரண்டதால், வெளியூர் செல்லும் ரயில்கள் தமாதமாக புறப்பட்டுச் சென்றன.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை கோவைக்கு செல்லும் பயணிகள் ரயில் நிறுத்தி வைக்கப்படிருந்தது. காலை 6 மணியளவில் ரயில் பெட்டிகளுடன் இணைப்பதற்காக எஞ்சினை ரயில்வே ஊழியர்கள் கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது தண்டவாளத்தில் இருந்து ரயில் இஞ்சின் திடீரென தடம் புரண்டது. இதனால் திருவனந்தபுரம், நெல்லை, மதுரை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் ரயில்கள் தாமதாமாகவே புறப்பட்டன. தடம்புரண்ட என்ஜினை மீட்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.