​​ புதுச்சேரி, தமிழகம், கேரளாவில் அதிக தற்கொலைகள் நடைபெறுவதாக என ஏ.கே.விஸ்வநாதன் தகவல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுச்சேரி, தமிழகம், கேரளாவில் அதிக தற்கொலைகள் நடைபெறுவதாக என ஏ.கே.விஸ்வநாதன் தகவல்

புதுச்சேரி, தமிழகம், கேரளாவில் அதிக தற்கொலைகள் நடைபெறுவதாக என ஏ.கே.விஸ்வநாதன் தகவல்

Sep 09, 2018 1:45 PM

இந்தியாவிலேயே புதுச்சேரி, தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் தான் அதிக தற்கொலைகள் நடைபெறுவதாக, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தற்கொலை தடுப்பு தினம் நாளை கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூரில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, மீண்டு வந்தவர்களை ஒருங்கிணைத்து இசபெல்லா மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, மீண்டு வருவதில் ஏற்பட்ட சிரமங்களை பலரும் பகிர்ந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனும் பங்கேற்று நினைவுப் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், உடல் நலத்தைப் பேணுவதுபோல, மனநலத்தையும் பேண வேண்டும் எனக் கூறினார்.

உலக அளவில் இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 17 சதவீத தற்கொலைகள் நடப்பதாகவும், இந்தியாவில் புதுச்சேரி, தமிழகம் மற்றும் கேரளாவில் அதிக தற்கொலை நடைபெறுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.