​​ பேராயர் மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்த கன்னியாஸ்திரியை பாலியல் தொழிலாளி என விமர்சித்த எம்எல்ஏ
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேராயர் மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்த கன்னியாஸ்திரியை பாலியல் தொழிலாளி என விமர்சித்த எம்எல்ஏ

பேராயர் மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்த கன்னியாஸ்திரியை பாலியல் தொழிலாளி என விமர்சித்த எம்எல்ஏ

Sep 09, 2018 1:41 PM

கேரளாவில் பேராயர் மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ள கன்னியாஸ்திரியையை, பாலியல் தொழிலாளி என எம்.எல்.ஏ. பி.சி.ஜார்ஜ் கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜலந்தர் மறைமாவட்ட பேராயர் ஃபிரான்கோ முலக்கல் நிர்வாகத்தின் கீழ் கோட்டயத்தில் தேவாலயம் ஒன்று உள்ளது.

இந்த தேவாலயத்தை கவனித்து வரும் கன்னியாஸ்திரி ஒருவர், முலக்கல் தம்மை பல்வேறு சந்தர்ப்பங்களில் 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள எம்.எல்.ஏ. ((PC)) பி.சி. ஜார்ஜ், இச்சம்பவம் குறித்து கன்னியாஸ்திரியை முன்கூட்டியே புகார் கூறாதது ஏன் என்று வினவியுள்ளார். 12 முறை இனித்த சம்பவம், 13ஆவது முறை மட்டும் எப்படி பாலியல் வன்கொடுமை ஆனது என்றும் கேட்டுள்ள பி.சி.ஜார்ஜ், கன்னியாஸ்திரியையை பாலியல் தொழிலாளி என விமர்சித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவரது பேச்சு அவமானகரமானது என தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.