​​ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விராட் கோலியின் பதவி பறிபோகிறதா?
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விராட் கோலியின் பதவி பறிபோகிறதா?

Published : Sep 09, 2018 12:42 PM

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விராட் கோலியின் பதவி பறிபோகிறதா?

Sep 09, 2018 12:42 PM

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பை விராட் கோலியிடம் இருந்து பறிக்கவுள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்து வருகிறார். ஆனால் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். தொடரில் கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டு தென்னாப்பிரிக்கா வீரர் ஏ.பி.டி வில்லியர்சை நியமிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால் இதை மறுத்துள்ள அணியின் செய்தி தொடர்பாளர் ஒருவர், பெங்களூரு அணியின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த கேப்டன் விராட் கோலி தான் என்றும், அவரே கேப்டனாக தொடர்வார் என்றும் தெரிவித்துள்ளார்.