​​ தனியார் பல்மருத்துவக் கல்லூரிகளில் சேர நாளை கலந்தாய்வு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியார் பல்மருத்துவக் கல்லூரிகளில் சேர நாளை கலந்தாய்வு

தனியார் பல்மருத்துவக் கல்லூரிகளில் சேர நாளை கலந்தாய்வு

Sep 09, 2018 12:41 PM

தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது.

தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 833 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நாளை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு காலை 9 மணிக்கும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு பிற்பகல் 2 மணிக்கும் நடைபெறுகிறது.

கலந்தாய்வு தொடங்குவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே உரிய சான்றிதழ்களுடன் மாணவர்கள் வளாகத்திற்கு வந்து சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.