​​ ராஜஸ்தானில் இருந்து ஹைதராபாத்திற்கு கடத்தப்பட்ட ஒட்டகங்கள் மீட்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராஜஸ்தானில் இருந்து ஹைதராபாத்திற்கு கடத்தப்பட்ட ஒட்டகங்கள் மீட்பு

Published : Sep 09, 2018 11:17 AM

ராஜஸ்தானில் இருந்து ஹைதராபாத்திற்கு கடத்தப்பட்ட ஒட்டகங்கள் மீட்பு

Sep 09, 2018 11:17 AM

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஹைதராபாத்திற்கு கடத்தப்பட்ட ஒட்டகங்கள், வழியில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு மீட்கப்பட்டன. ட்ரக் மூலமாக வெளிமாநிலத்திற்கு ஒட்டகங்கள் கடத்திச் செல்லப்படுவதாக  தகவல் கிடைத்ததை அடுத்து, அவுரங்கபாத் அருகே அந்த வாகனத்தை மகாராஷ்ட்ரா போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அவற்றில் 14 ஒட்டகங்கள் ஏற்றிச் செல்லப்படுவது தெரிந்தது. இதனையடுத்து அந்த ஒட்டகங்களை போலீசார் மீட்டனர். இவற்றில் ஒரு ஒட்டகம் உயிரிழந்து விட்டது. மற்ற 13 ஒட்டகங்களும் அவுரங்காபாத்தில் உள்ள பசு பாதுகாப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.