​​ ரபேல் போர் விமானம் வாங்குவதற்காக அனில் அம்பானிக்கு கமிஷன் கொடுக்கப்பட்டுள்ளதாக பிரசாந்த் பூஷன் குற்றச்சாட்டு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரபேல் போர் விமானம் வாங்குவதற்காக அனில் அம்பானிக்கு கமிஷன் கொடுக்கப்பட்டுள்ளதாக பிரசாந்த் பூஷன் குற்றச்சாட்டு

ரபேல் போர் விமானம் வாங்குவதற்காக அனில் அம்பானிக்கு கமிஷன் கொடுக்கப்பட்டுள்ளதாக பிரசாந்த் பூஷன் குற்றச்சாட்டு

Sep 09, 2018 8:25 AM

ரபேல் போர் விமானம் வாங்குவதற்காக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் கமிஷனாக கொடுக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றம்சாட்டியிருக்கிறார். 

ரபேல் விமானங்களை விற்பனை செய்யும் பிரான்ஸ் நிறுவனமான டஸ்சால்ட் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, பாதுகாப்பு தளவாடங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், ரபேல் விமானம் வாங்குவதில் கற்பனைக்கு எட்டாத வகையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜீவ் ஆட்சியில் போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் 4 சதவிகிதம் கமிஷன் எனும் அடிப்படையில் ஊழல் நடைபெற்றதாக கூறியுள்ளார். ஆனால், ரபேல் போர் விமான விவகாரத்தில், 30 சதவீதம் கமிஷன் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், இதன்மூலம் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கமிஷனாக மட்டுமே 21 ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.