​​ தமிழக கோவில்களில் இடைதரகர்கள் தொல்லை..! நீதிபதிகள் ஆய்வில் பகீர்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக கோவில்களில் இடைதரகர்கள் தொல்லை..! நீதிபதிகள் ஆய்வில் பகீர்

Published : Sep 09, 2018 7:43 AM

தமிழக கோவில்களில் இடைதரகர்கள் தொல்லை..! நீதிபதிகள் ஆய்வில் பகீர்

Sep 09, 2018 7:43 AM

ராமநாதபுரம் அருகே கோவிலில் அர்ச்சர்கள் போல நடித்து பக்தர்களின் பணம் பறித்தவர்கள் நீதிபதி ஆய்வில் சிக்கினர். இதே போல திருவண்ணாமலை கோவிலில் இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுனர். 

ராமாநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் நவபாஷண நவக்கிரக கோவிலில் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி கயல்விழி ஆய்வு மேற்கொண்டார். கோவிலில் அர்ச்சகர்கள் என்ற பெயரில் உலவும் கும்பல், வெளியூரில் இருந்து வரும் பக்தர்களிடம் பரிகாரங்கள் செய்து தருவதாகக் கூறி பண வேட்டையில் ஈடுபடுவதாக அவரிடம் புகார் கூறப்பட்டது. இதையடுத்து கோவில் மண்டபத்தில் பரிகார பூஜைகள் செய்வதாகக் கூறி அமர்ந்திருந்த ஒருவரிடம் நீதிபதி கயல்விழி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

 

பின்னர் அங்கிருந்து கோவில் கழிவறை பகுதிக்குச் சென்று ஆய்வு செய்த நீதிபதி, பராமரிப்பு இல்லாமல் துர்நாற்றத்துடன் காணப்பட்ட அதன் அவல நிலை கண்டு அங்கிருந்தவர்களை கடிந்து கொண்டார். தமது ஆய்வு குறித்த அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்க உள்ளதாக நீதிபதி கயல்விழி கூறினார்.

 

இதனிடையே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெற்ற மாவட்ட நீதிபதி மகிழேந்தியின் ஆய்வுக்குப் பின், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் முதற்கட்டமாக 12 இடைத்தரகர்கள் மீது புகார் அளித்தார். அவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ளவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.