​​ குமாரசாமி நாளை டெல்லியில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குமாரசாமி நாளை டெல்லியில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

குமாரசாமி நாளை டெல்லியில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

Sep 09, 2018 7:20 AM

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி நாளை பிரதமர் மோடியை டெல்லியில் சந்திக்க உள்ளார்.

குடகு மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகள் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரண நிதி கோரி அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் உதவியை அவர் நாடியுள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, கேரளாவுக்கு 500 கோடியை கொடுத்த பிரதமர் மோடி, கர்நாடகத்திற்கு 100 கோடியாவது தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.