​​ கோடிக்கணக்கில் ஊதியம் பெறும் புகழ் பெற்ற நடிகைக்கு மன அழுத்தம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோடிக்கணக்கில் ஊதியம் பெறும் புகழ் பெற்ற நடிகைக்கு மன அழுத்தம்

கோடிக்கணக்கில் ஊதியம் பெறும் புகழ் பெற்ற நடிகைக்கு மன அழுத்தம்

Sep 09, 2018 7:03 AM

அடுத்த வேளை உணவுக்கும் வழியில்லாமல் வேலைவாய்ப்பில்லாமல் வாழ்க்கையில் எந்த ஒரு துணையும் ஆதரவும் இல்லாமல் வாழும் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கும் இல்லாத மன அழுத்தம் கோடிக்கணக்கில் ஊதியம் பெறும் நடிகைகளுக்கு ஏற்படுகிறது.

புகழின் உச்சத்தில் உள்ள பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், தமக்கு ஏற்பட்ட மன அழுத்தம் குறித்து பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமது நிலையை விளக்கிய தீபிகா படுகோன், மன நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே தமக்கு ஏற்பட்ட மன அழுத்தம் குறித்து பேசியதாக கூறினார்.

மன அழுத்தத்தை எதிர்கொள்ள தாம் மேற்கொண்ட பயிற்சிகளை விளக்கிய அவர், தமது உணர்ச்சிகள், எண்ணங்களை வெளியிட்டார்.