​​ ஊழல் மலிந்து விட்டதாகக் கூறி ஈராக்கில் பொதுமக்கள் போராட்டம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஊழல் மலிந்து விட்டதாகக் கூறி ஈராக்கில் பொதுமக்கள் போராட்டம்

ஊழல் மலிந்து விட்டதாகக் கூறி ஈராக்கில் பொதுமக்கள் போராட்டம்

Sep 09, 2018 7:00 AM

ஈராக்கின் முக்கிய நகரமான பஸ்ராவில் நடந்த போராட்டத்தில் அரசு அலுவலகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இரண்டாவது பெரிய நகரமான பஸ்ராவில் நிர்வாகக் கட்டமைப்புகள் சரியாக இல்லை என்று கூறியும், ஊழல் மலிந்து விட்டதாகவும், தங்கள் தேவைக்கான பணி புறக்கணிக்கப்படுவதாகவும் கூறி அந்நகரத்து மக்கள் கடந்த 6 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் பொதுமக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் ஆங்காங்கே மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த போராட்டத்தின் போது நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு தீ வைத்து எரித்தனர். இதையடுத்து அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.