​​ நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு...தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு...தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு...தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு

Sep 09, 2018 6:49 AM

நெல்கொள் முதல் நிலையங்கள் வரும் 30 ஆம் தேதி வரை திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் காரீப் பருவத்திற்கான நெல் கொள்முதல் நிலையங்கள் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மட்டுமே செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், செப்டம்பர் மாதத்திலும் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்ததாக கூறப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கை குறித்து, பிரதமர் மோடி மற்றும் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்திருக்கும் தேதியை வரும் 30 ஆம் தேதிவரை நீட்டித்து மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.