​​ மரமேறி தப்பிக்க முயன்ற பாம்பை தாவிப் பிடித்த கீரி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மரமேறி தப்பிக்க முயன்ற பாம்பை தாவிப் பிடித்த கீரி

Published : Sep 09, 2018 6:44 AM

மரமேறி தப்பிக்க முயன்ற பாம்பை தாவிப் பிடித்த கீரி

Sep 09, 2018 6:44 AM

குஜராத் மாநிலத்தில் மரமேறி தப்பிக்க முயன்ற பாம்பை, கீரி ஒன்று விரட்டிப் பிடித்த காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வீட்டுக்குள் புகுந்த பாம்பு ஒன்றினை வீட்டின் உரிமையாளர் விரட்ட வெளியே வந்த பாம்பு அருகில் இருந்த கட்டிலில் ஏறி தொடர்ந்து மரத்தின் மீதேறி தப்பிக்க முயன்றது.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த கீரி ஒன்று பாம்பின் வாசனையை நுகர்ந்தது. அடுத்த நொடியில் மரத்தின் மீது இருந்த பாம்பினை தாவிப்பிடித்து, கடித்து காட்டுக்குள் இழுத்துச் சென்றது.