​​ இந்துக்கள் ஒன்றிணைய வேண்டும் என RSS அழைப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்துக்கள் ஒன்றிணைய வேண்டும் என RSS அழைப்பு

இந்துக்கள் ஒன்றிணைய வேண்டும் என RSS அழைப்பு

Sep 09, 2018 6:38 AM

சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையின் 125 வது ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இந்துக்களுக்கு ஆதிக்க மனப்பான்மை இல்லை என்று தெரிவித்துள்ளார்.இந்துக்கள் சிங்கத்தைப் போன்றவர்கள் என்பதால், கூட்டமாக சேர மாட்டார்கள்.

தனித்து இருப்பார்கள் என்றும், அதே நேரத்தில் தனியாக இருந்தால் வேட்டை நாய்கள் கூட சிங்கத்தைக் குதறி விடும் என ஈசாப் கதையைப் அவர் விவரித்தார். இந்துக்கள் ஒரே சமூகமாக ஒன்றிணைய வேண்டும் என்றும் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே மோகன் பகவத்தின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.