​​ மக்கள் நீதிமன்றத்தில் 75,000 வழக்குகளில் தீர்வு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மக்கள் நீதிமன்றத்தில் 75,000 வழக்குகளில் தீர்வு

மக்கள் நீதிமன்றத்தில் 75,000 வழக்குகளில் தீர்வு

Sep 08, 2018 8:51 PM

தமிழகம் முழுவதும் நடைபெற்ற, மக்கள் நீதிமன்றத்தில் 75 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் சனிக்கிமை அன்று 447 அமர்வுகளில் தேசிய லோக் அதாலத் நடத்தபட்டது. இதில், காசோலை மோசடி , தொழிலாளர்கள் பிரச்சனை உள்ளிட்ட 11 வகையான வழக்குகள்  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபட்டன.

தமிழகம் முழுவதும், 447 அமர்வுகளில், 2 லட்சத்து 8 ஆயிரத்து 916 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படன.  மாலை 6 மணி வரை 74 ஆயிரத்து 971 வழக்குகள்  தீர்வு காணப்பட்டு அவற்றின் மூலம் 179 கோடியே 35 லட்சத்து 84 ஆயிரத்து 461 ரூபாய் மதிப்பிலான தொகைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.