​​ தடையில்லா மின்சாரத்துக்காக ரூ.1,659 கோடியில் பணிகள் தீவிரம் - தங்கமணி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தடையில்லா மின்சாரத்துக்காக ரூ.1,659 கோடியில் பணிகள் தீவிரம் - தங்கமணி

Published : Sep 08, 2018 6:23 PM

தடையில்லா மின்சாரத்துக்காக ரூ.1,659 கோடியில் பணிகள் தீவிரம் - தங்கமணி

Sep 08, 2018 6:23 PM

ஊராட்சிகளில் தடையில்லா மின்சாரம் அளிக்க ஆயிரத்து 659 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத்திட்டப்பணிகள் நடந்து வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் வெடியரசம்பாளையத்தில் உடற்பயிற்சி மையத்துடன் கூடிய பூங்கா, அங்கன்வாடி கட்டிடம் உள்ளிட்டவற்றை அவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் சட்டவிரோத போதைப்பொருள்கள் விற்பனை குறித்து தகவல் அளிக்கப்பட்டால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.