​​ 80 சதவீத ஊனம் எனக் கூறி, மருத்துவப் படிப்பில் சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவிக்கு நீட் தேர்வை நிர்பந்திக்காமல் சேர்க்கை வழங்க உத்தரவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
80 சதவீத ஊனம் எனக் கூறி, மருத்துவப் படிப்பில் சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவிக்கு நீட் தேர்வை நிர்பந்திக்காமல் சேர்க்கை வழங்க உத்தரவு

80 சதவீத ஊனம் எனக் கூறி, மருத்துவப் படிப்பில் சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவிக்கு நீட் தேர்வை நிர்பந்திக்காமல் சேர்க்கை வழங்க உத்தரவு

Sep 08, 2018 6:21 PM

80 சதவீத ஊனம் எனக் கூறி, மருத்துவப் படிப்பில் சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவிக்கு நீட் தேர்வை நிர்பந்திக்காமல் சேர்க்கை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

70 சதவீதத்துக்கு மேல் மேல் ஊனம் இருக்கக் கூடாது என்ற விதியின் படி 2016 - 17-ல் சேர்க்கை மறுக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட மாற்றுத் திறனாளி மாணவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மாற்றுத் திறனாளிகள் ஒதுக்கீட்டில் தகுதியானவர்கள் இல்லாவிட்டால் 40 முதல் 50 சதவீத ஊனம் உள்ளவர்களுக்கு வாய்ப்பளிக்க விதி உள்ள நிலையில் அதிக ஊனம் கொண்டவருக்கு தகுதியில்லை எனக் கூற முடியாது என்று கூறி சேர்க்கை மறுப்பு உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

நீட் தேர்வு அமலுக்கு முன்பே மருத்துவப் படிப்புக்கு தகுதி பெற்ற மனுதாரர் அரசின் செயலால் ஏற்கனவே 2 ஆண்டுகளை இழந்துவிட்டதால் நீட் தேர்வை நிர்பந்திக்காமல் நடப்பாண்டில்  சேர்க்கை வழங்கவும் உத்தரவிட்டனர்.