​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவல்துறையிலிருந்து மாற்றப்பட்டது வருத்தமளிக்கிறது - காஷ்மீர் முன்னாள் DGP

Published : Sep 08, 2018 5:49 PM

காவல்துறையிலிருந்து மாற்றப்பட்டது வருத்தமளிக்கிறது - காஷ்மீர் முன்னாள் DGP

Sep 08, 2018 5:49 PM

காவல் துறையிலிருந்து மாற்றப்பட்டது வருத்தமளிப்பதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் டி.ஜி.பி.யான எஸ்.பி.வைத் ((SP Vaid)) தெரிவித்துள்ளார். அம்மாநிலத்தில் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட போலீசாரின் குடும்பத்தினரை விடுவிப்பதற்காக, சிறையில் இருந்த சில தீவிரவாதிகளை போலீசார் விடுவித்தனர்.

இந்நிலையில், கடந்த 20 மாதங்களாக டி.ஜி.பி.யாக இருந்த எஸ்.பி.வைத், போக்குவரத்து ஆணையராக பணிமாற்றம் செய்யப்பட்டார். புதிய டிஜிபியாக, சிறைத்துறை இயக்குநராக இருந்த தில்பக் சிங் (( Dilbagh Singh )) நியமிக்கப்பட்டார்.

இந்த பணியிட மாற்றமும், போலீஸ் சீருடை அணிய முடியாத நிலையும் வருத்தமளிப்பதாக முன்னாள் டி.ஜி.பி. வைத் கூறியுள்ளார். காஷ்மீரில் நிலவும் வன்முறையை முற்றிலும் ஒழிக்க செயல்பட்டதாகவும், அந்த இலக்கு முற்றிலும் நிறைவடையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.