​​ ஐசிஐசிஐ வங்கிக் கட்டடம் வீடியோகான் நிறுவனத்துக்கு விற்பனை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஐசிஐசிஐ வங்கிக் கட்டடம் வீடியோகான் நிறுவனத்துக்கு விற்பனை

Published : Sep 08, 2018 5:31 PM

ஐசிஐசிஐ வங்கிக் கட்டடம் வீடியோகான் நிறுவனத்துக்கு விற்பனை

Sep 08, 2018 5:31 PM

மும்பையில் ஐசிஐசிஐ வங்கிக்குச் சொந்தமான கட்டடம் வீடியோகான் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது குறித்து வருமான வரித்துறை விசாரித்து வருகிறது. மும்பை பிரபாதேவியில் ராதிகா அப்பார்ட்மென்ட் என்னும் பெயரில் உள்ள 13மாடிக் கட்டடம் ஐசிஐசிஐ வங்கிப் பணியாளர்களின் குடியிருப்பாகச் செயல்பட்டு வந்தது. 2010ஆம் ஆண்டு இந்தக் கட்டடத்தை ஐசிஐசிஐ வங்கி வீடியோகான் நிறுவனத்துக்கு விற்றுவிட்டது.

வீடியோகான் நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கியில் பெற்ற 234கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்தாததை அடுத்து, இந்தக் கட்டடத்தை இப்போது பாரத ஸ்டேட் வங்கி கையகப்படுத்தியுள்ளது. 2010ஆம் ஆண்டு ராதிகா அப்பார்ட்மென்ட் கட்டடம் ஒரு சதுர அடி 17ஆயிரம் ரூபாய் என்கிற கணக்கில் 61கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் சந்தை மதிப்பு ஒரு சதுர அடி 25ஆயிரம் ரூபாயாகும். இதனால் வரி ஏய்ப்பதற்காகக் குறைந்த மதிப்புக்கு விற்கப்பட்டதா என்பது குறித்து வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது.