​​ 7,200 ஆயிரம் Ford EcoSport கார்களைத் திரும்பப் பெற Ford நிறுவனம் முடிவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
7,200 ஆயிரம் Ford EcoSport கார்களைத் திரும்பப் பெற Ford நிறுவனம் முடிவு

Published : Sep 08, 2018 5:27 PM

7,200 ஆயிரம் Ford EcoSport கார்களைத் திரும்பப் பெற Ford நிறுவனம் முடிவு

Sep 08, 2018 5:27 PM

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 7 ஆயிரத்து 200 ஃபோர்டு எகோ ஸ்போர்ட் (Ford EcoSport) கார்களை திரும்பப் பெற ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

2017 நவம்பர் முதல் கடந்த மார்ச் வரை தயாரிக்கப்பட்ட பெட்ரோல் மாடல் கார்களை மட்டும் திரும்பப் பெறப் போவதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது. வாகனத்தை இயக்குவதற்கான பவர்ட்ரெய்ன் கன்ட்ரோல் மாடுல் (Powertrain Control Module) தொழில்நுட்பத்திற்கான மென் பொருளை மேம்படுத்துவதற்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மின்னஞ்சல் மூலமாகவோ, கடிதம் மூலமாகவோ வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளப்படுவார்கள் என்றும் ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.