​​ ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்க நடவடிக்கை - செங்கோட்டையன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்க நடவடிக்கை - செங்கோட்டையன்

ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்க நடவடிக்கை - செங்கோட்டையன்

Sep 08, 2018 5:27 PM

மாணவர்களுக்கு வழங்கப்படுவதுபோல், ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தருமபுரி இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் ஆசிரியர் தின சிறப்பு மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழக அரசு கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்து ஆசிரியர்களை ஊக்குவித்து வருவதாகவும், வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 3 இலட்சம் மாணவர்களை சேர்ப்பதே இலக்கு என கூறினார்.