​​ சட்டத்தை மீறுபவர்களுக்கு எங்கள் நீதித்துறை புகலிடம் அளிக்காது - பிரிட்டன் அமைச்சர்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சட்டத்தை மீறுபவர்களுக்கு எங்கள் நீதித்துறை புகலிடம் அளிக்காது - பிரிட்டன் அமைச்சர்

சட்டத்தை மீறுபவர்களுக்கு எங்கள் நீதித்துறை புகலிடம் அளிக்காது - பிரிட்டன் அமைச்சர்

Sep 08, 2018 4:31 PM

சட்டத்தை மீறுபவர்களுக்கு பிரிட்டன் நீதித்துறை புகலிடம் அளிக்காது என்று அந்நாட்டு அமைச்சர் கிரஹாம் ஸ்டூவர்ட் ((Graham Stuart)) தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் விஜய்மல்லையாவை நாடுகடத்த இந்தியாவுக்கு பிரிட்டன் எப்படி உதவப் போகிறது என கேள்வி எழுப்பப்பட்டது. பிரிட்டன் உலகின் மரியாதைக்குரிய சட்ட அமைப்பை கொண்டுள்ளதாகவும் யார் வேண்டுமானாலும் அதில் வழக்காடலாம் என்றும்  தெரிவித்த அவர், ஆனால் சட்டத்தை மீறுபவர்களுக்கு சட்டம் புகலிடம் அளிக்காது என்றார்.

தாங்கள் இந்தியாவுடன் ஒத்துழைத்து வருவதாகக் கூறிய அவர், சட்டபூர்வ நடைமுறைகள் தொடர்ந்து வருவதாகவும், அதன் மூலம் நீதி நிச்சயம் நிலை நாட்டப்படும் என்றும் தெரிவித்தார்.