​​ நேபாளத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நேபாளத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

Sep 08, 2018 4:12 PM

நேபாளத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

கோர்க்கா ((Gorkha)) மாவட்டத்தில் இருந்து ஜப்பானைச் சேர்ந்த மலையேற்ற வீரர் உள்ளிட்ட 7 பேருடன் புறப்பட்ட இந்த ஹெலிகாப்டரின் தொடர்பு சற்று நேரத்தில் துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் தத்திங் ((Dhadhing)) மாவட்டத்துக்குட்பட்ட சத்யவதி ((Satyawati)) என்ற இடத்தில் மலைப் பகுதியில் ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கபட்டன. மீட்பு விமானங்கள் மூலமும், தரை வழியாகவும் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த 6 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். ஒரு பெண்ணை மட்டும் உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.