​​ நீலகிரி அருகே காட்டுயானை தாக்கி பெண் பலி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீலகிரி அருகே காட்டுயானை தாக்கி பெண் பலி

Published : Sep 08, 2018 4:05 PM

நீலகிரி அருகே காட்டுயானை தாக்கி பெண் பலி

Sep 08, 2018 4:05 PM

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

ஓவேலி பேருராட்சிக்கு உட்பட்ட சீ.புரம் பகுதியைச் சேர்ந்த சரோஜினி, இன்று காலை 6 மணியளவில் பேருந்து நிறுத்தத்துக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காட்டுயானை ஒன்று, சரோஜினியை மூர்க்கத்தனமாகத் தாக்கியது.

இதில் படுகாயமடைந்த அவரை அருகிலிருந்தோர் மீட்டு, கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக உதகை மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் சரோஜினி உயிரிழந்தார். இந்நிலையில் யானை நடமாட்டத்தால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.