​​ நீண்ட அரசியல் உரையாற்றிய ஒபாமா..! உறங்கி விட்டதாக டிரம்ப் கிண்டல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீண்ட அரசியல் உரையாற்றிய ஒபாமா..! உறங்கி விட்டதாக டிரம்ப் கிண்டல்

நீண்ட அரசியல் உரையாற்றிய ஒபாமா..! உறங்கி விட்டதாக டிரம்ப் கிண்டல்

Sep 08, 2018 4:01 PM

அமெரிக்காவில் ஆரோக்கியமான ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவர், இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பை அவர் கடுமையாகச் சாடினார். பயம் மற்றும் வெறுப்புணர்வை தூண்டுவதே டிரம்பின் அரசியல் எனக் குற்றம்சாட்டினார்.

இன்னும் இரண்டு மாதங்களில் அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அப்போது நல்ல அரசியலைக் கொண்டு வர நமக்கு வாய்ப்பு உள்ளது என்றும் ஒபாமா தெரிவித்தார். இவரது பேச்சைக் கிண்டல் செய்துள்ள டொனால்ட் டிரம்ப், ஒபாமாவின் பேச்சை கேட்டதாகவும், ஆனால் சிறிது நேரத்தில் உறங்கி விட்டதாகவும் கூறியுள்ளார்.