​​ 7 பேரை விடுதலை செய்வதே ஜெயலலிதாவின் முடிவு - வைகோ
Polimer News
Polimer News Tamil.
Advertisement
7 பேரை விடுதலை செய்வதே ஜெயலலிதாவின் முடிவு - வைகோ

7 பேரை விடுதலை செய்வதே ஜெயலலிதாவின் முடிவு - வைகோ

Sep 08, 2018 3:57 PM

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதென, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு ஏற்கனவே முடிவு செய்திருந்தது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஈரோடு மூலக்கரையில் வரும் 15-ஆம் தேதி அக்கட்சியின் மாநில மாநாடு நடைபெற உள்ள இடத்தை பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது, 7 பேர் விடுதலை விவகாரத்தில், ஜெயலலிதா எடுத்த நிலைப்பாட்டையே அமைச்சரவையின் முடிவாக அறிவிக்க வேண்டுமென தமிழக அரசை வைகோ வலியுறுத்தினார். மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, திங்களன்று நடைபெறும் முழு அடைப்புக்கு மதிமுக ஆதரவு தெரிவிப்பதாகவும் வைகோ குறிப்பிட்டார்.