​​ ஏரோ இந்தியா 2019 : இந்தியாவின் பெருமைக்குரிய விமானக் கண்காட்சி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஏரோ இந்தியா 2019 : இந்தியாவின் பெருமைக்குரிய விமானக் கண்காட்சி

Published : Sep 08, 2018 3:39 PM

ஏரோ இந்தியா 2019 : இந்தியாவின் பெருமைக்குரிய விமானக் கண்காட்சி

Sep 08, 2018 3:39 PM

ஏரோ இந்தியா 2019 எனப்படும் இந்தியாவின் மிகப்பெரிய விமானக் கண்காட்சி பெங்களூருவில் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்தக் கண்காட்சி தொடர்ந்து பெங்களூருவிலேயே நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஏரோ இந்தியா கண்காட்சியை தங்கள் மாநிலத்தில் நடத்துமாறு பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு தமிழகம், உத்தரப்பிரதேசம் குஜராத், ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.

இந்த நிகழ்ச்சி இந்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடத்தப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகின. ஆனால் அங்கு இந்த கண்காட்சியை நடத்த வசதி வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 20 முதல் 24-ஆம் தேதி வரை ஏரோ இந்தியா 2019 கண்காட்சி பெங்களூரில் நடத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.