​​ பொருளாதாரம், விவசாயம் என அனைத்து துறைகளிலும் மோடி அரசு தோல்வி : மன்மோகன் சிங் கடும் குற்றச்சாட்டு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொருளாதாரம், விவசாயம் என அனைத்து துறைகளிலும் மோடி அரசு தோல்வி : மன்மோகன் சிங் கடும் குற்றச்சாட்டு

பொருளாதாரம், விவசாயம் என அனைத்து துறைகளிலும் மோடி அரசு தோல்வி : மன்மோகன் சிங் கடும் குற்றச்சாட்டு

Sep 08, 2018 3:24 PM

பொருளாதாரம், விவசாயம் என அனைத்து துறைகளிலும் மோடி அரசு தோல்வியடைந்துவிட்டதாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சனைகளை களைய இதுவரை பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினார். விவசாயிகளுக்கு தற்போதுவரை தங்களது பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று கூறிய மன்மோகன் சிங்,  அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணுவதிலும் பாஜக அரசு தோல்வி கண்டுள்ளதாக விமர்சித்தார்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுதோறும் 2 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மோடி கூறிய நிலையில் கடந்த 4 ஆண்டு ஆட்சியில், வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துவிட்டதாகவும் மன்மோகன் சிங் குற்றஞ்சாட்டினார்.