​​ டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய பெண்கள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய பெண்கள்

Published : Sep 08, 2018 3:16 PM

டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய பெண்கள்

Sep 08, 2018 3:16 PM

விழுப்புரம் அருகே கணவன்மார்கள் நீண்ட தூரம் சென்று குடிக்க முடியாமல் தவிப்பதாகக் கூறி மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என பெண்களே போராட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

விழுப்புரம் சாலாமேடு பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை அப்பகுதியைச் சேர்ந்த சில பெண்களின் போராட்டத்தால் மூன்று மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதனால் மதுப்பிரியர்கள் 5 கிலோ மீட்டர் தூரம் சென்று மது வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தங்கள் கணவன்மார்கள் சிரமப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று கூறி மதுப்பிரியர்களின் மனைவிகள், மீண்டும் டாஸ்மாக்கை திறக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

 

இதனிடையே டாஸ்மாக் கடை மூடுவதற்கு காரணமாக இருந்த பெண்கள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீண்டும் டாஸ்மாக் கடை திறந்தால் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்ததால் அங்கு பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினர் செய்வதறியாது தவித்தனர்.