​​ நேபாளத்தில் 7 பேர் பயணித்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்து
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நேபாளத்தில் 7 பேர் பயணித்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்து

நேபாளத்தில் 7 பேர் பயணித்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்து

Sep 08, 2018 1:48 PM

நேபாளத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து அதில் இருந்த 7 பயணிகளின் நிலை என்ன எனத் தெரியவில்லை.

கோர்க்கா ((Gorkha)) மாவட்டத்தில் இருந்து ஜப்பானைச் சேர்ந்த மலையேற்ற வீரர் உள்ளிட்ட 7 பேருடன் புறப்பட்ட இந்த ஹெலிகாப்டரின் தொடர்பு சற்று நேரத்தில் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் தத்திங் ((Dhadhing)) மாவட்டத்துக்குட்பட்ட சத்யவதி ((Satyawati)) என்ற இடத்தில் மலைப் பகுதியில் ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளன.

மீட்பு விமானங்கள் மூலம் தரை வழியாகவும் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் கடுமையான வானிலை காரணமாக மீட்புப் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஹெலிகாப்டரில் இருந்த 7 பேரைக் கண்டுபிடிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.