​​ சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழப்பு

சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழப்பு

Sep 08, 2018 11:51 AM

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிவகாசியை அடுத்த காக்கிவாடன்பட்டியில் ராஜூ என்பவருக்குச் சொந்தமான கிருஷ்ணசாமி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இன்று காலை அந்த ஆலையில்  தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை ஆலை வளாகத்தில் உள்ள குடோனில் அடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இந்த விபத்தில் பாட்டாசுகள் அடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த முருகன் உள்ளிட்ட 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால், குடோன்கட்டிடம் இடிந்து விழுந்ததோடு, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.