​​ திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

Sep 08, 2018 11:03 AM

சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை தேனாம்பேட்டையில் அண்ணா அறிவாலயத்தின் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்குப் பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் திண்டுக்கல் பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்தக் கூட்டத்தில் 65மாவட்டச் செயலாளர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். கட்சியில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது, மாவட்டந்தோறும் கட்சியை வலுப்படுத்துவது, வாக்காளர் பட்டியலில் ஆட்களைச் சேர்க்கும் பணி, திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை எதிர்கொள்வது, உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றுக்குத் தயாராவது ஆகியவை பற்றி விவாதிக்கப்படுகிறது. கூட்டத்தின் முடிவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.