​​ ஆழியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆழியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

ஆழியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

Jan 23, 2018 10:54 AM

விவசாயிகள் எதிர்ப்பைத் தொடர்ந்து, ஆழியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. பரம்பிக்குளம் – ஆழியாறு திட்ட ஒப்பந்தப்படி, கேரளாவுக்கு ஆண்டுதோறும் 7.25 டி.எம்.சி தண்ணீரை தமிழக அரசு வழங்கி வருகிறது.

இந்தாண்டு, ஏற்கனவே 5 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள தண்ணீரை வழங்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பொள்ளாச்சியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் நேற்று திரண்ட விவசாயிகள், அணையில் இருக்கும் குறைந்த அளவு தண்ணீரையும் கேரளாவிற்கு திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்தனர். 

தண்ணீரை நிறுத்த வலியுறுத்தி, அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டனர். விவசாயிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து, கேரளாவுக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.