​​ குட்கா முறைகேடு தொடர்பாக சிபிஐ கொடுத்த ஆவண விவரங்கள் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் விசாரணையை தொடங்கினர்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குட்கா முறைகேடு தொடர்பாக சிபிஐ கொடுத்த ஆவண விவரங்கள் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் விசாரணையை தொடங்கினர்

Published : Sep 08, 2018 10:31 AM

குட்கா முறைகேடு தொடர்பாக சிபிஐ கொடுத்த ஆவண விவரங்கள் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் விசாரணையை தொடங்கினர்

Sep 08, 2018 10:31 AM

குட்கா முறைகேடு தொடர்பாக சிபிஐ கொடுத்த ஆவண விவரங்கள் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

குட்கா முறைகேடு விவகாரத்தில் கடந்த 3 நாட்களாக சோதனை, கைது என அடுத்தடுத்த நடவடிக்கைகளை சிபிஐ மேற்கொண்டு வருகிறது. 35 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது பல்வேறு சி.பி.ஐ அதிகாரிகள் ஆவணங்களையும் கைப்பற்றினர். இந்த ஆவணங்களில் சட்டவிரோத பணப்பறிமாற்றம் தொடர்புடைய தகவல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து குட்கா விவகாரத்தில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் குறித்து ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்துள்ள  அமலாக்கத்துறைக்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சி.பி.ஐ அனுப்பியுள்ளது. அந்த ஆவணங்களில் பல்வேறு சொத்து ஆவணங்களும் அடங்கும் என்று சொல்லப்படுகிறது. இதனை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.