​​ அருப்புக்கோட்டையில் உள்ள SPK நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அருப்புக்கோட்டையில் உள்ள SPK நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை

அருப்புக்கோட்டையில் உள்ள SPK நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை

Sep 08, 2018 8:40 AM

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வருமான வரி சோதனையில் சிக்கிய எஸ் பி கே நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

வரி ஏய்ப்பு செய்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில் SPK நிறுவன அலுவலகங்கள் மற்றும் உரிமையாளர்கள்  இல்லங்கள் உள்ளிட்ட 27 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 183 கோடி ரூபாய் ரொக்கம் 105 கிலோ தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்நிலையில் நேற்று  வருமான வரித்துறை அதிகாரிகள் அருப்புக்கோட்டையில் உள்ள SPK நிறுவன நிர்வாக இயக்குநர்களான செய்யாதுரை உள்ளிட்டோரின் வீட்டில் கைப்பற்றபட்ட பணம் மற்றும் நகைகள் கணக்கில் காட்டப்பட்டுள்ளனவா என்பது குறித்து விசாரணை நடத்தினர். நேற்று இரவு 11 மணி வரை நடைபெற்றது. விசாரணை இன்றும் தொடரும் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.