​​ பெட்ரோல்- டீசல் விலை மேலும் உயர்வு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெட்ரோல்- டீசல் விலை மேலும் உயர்வு

பெட்ரோல்- டீசல் விலை மேலும் உயர்வு

Sep 08, 2018 7:43 AM

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் 83 ரூபாய் 54 காசுகளுக்கும்  டீசல் விலை லிட்டர் 76 ரூபாய் 64 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை 83 ரூபாய் 13 காசுகளாக இருந்த நிலையில் இன்று மேலும் 41 காசுகள் உயர்ந்து 83 ரூபாய் 53 காசுகளாக உள்ளது. அதே போன்று டீசல் விலை நேற்று 76 ரூபாய் 17 காசுகளாக இருந்த நிலையில் இன்று 47 காசுகள் உயர்ந்து 76 ரூபாய் 64 காசுகளுக்கு விற்பனையாகிறது. கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் உற்பத்தியை அதிகரிக்காததால் விலை உயர்வு மற்றும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்டவையே பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம் என மத்திய அரசு விளக்கம் அளித்து வருகிறது. 

இந்நிலையில் பெட்ரோல் டீசல், விலை உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் செப்டம்பர் 10-ஆம் தேதி காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் மற்றும் தி.மு.க., ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.