​​ இடுப்பு மாற்றுச் சிகிச்சையில் தரமற்ற செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு இழப்பீடு : ஜான்சன் & ஜான்சன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இடுப்பு மாற்றுச் சிகிச்சையில் தரமற்ற செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு இழப்பீடு : ஜான்சன் & ஜான்சன்

Published : Sep 08, 2018 7:40 AM

இடுப்பு மாற்றுச் சிகிச்சையில் தரமற்ற செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு இழப்பீடு : ஜான்சன் & ஜான்சன்

Sep 08, 2018 7:40 AM

இடுப்பு மாற்றுச் சிகிச்சையின் போது தரமற்ற செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு இழப்பீடு வழங்க ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் முன்வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு, ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அண்மையில் அறிவுறுத்தி இருந்தது.

அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசுடன் இணைந்து மேற்கொள்ளத் தயார் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அனுப்பி உள்ள மின்னஞ்சல் கடிதத்தில் ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.