​​ துதிக்கையை இழந்து தவிக்கும் ஆப்பிரிக்க யானைக்குட்டி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
துதிக்கையை இழந்து தவிக்கும் ஆப்பிரிக்க யானைக்குட்டி

துதிக்கையை இழந்து தவிக்கும் ஆப்பிரிக்க யானைக்குட்டி

Sep 08, 2018 7:31 AM

தென் ஆப்பிரிக்காவில் துதிக்கையை இழந்த குட்டி யானையை மற்ற யானைகள் பரிவோடு பராமரித்து வருகின்றன.

குரூகர் தேசியப் பூங்காவில் குட்டி யானை ஒன்று துதிக்கை இல்லாமல் இருந்ததைக் கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். நீர் அருந்தும் போது முதலை கடித்ததால் அந்த யானை தனது துதிக்கையை இழந்திருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

image

ஆனால் மோப்ப சக்தி, நீர் அருந்த, உணவு உண்பதற்கு என அனைத்து வேலைகளுக்கும் மூலாதாரமான துதிக்கையை இழந்து கிட்டத்தட்ட அந்த குட்டியானை இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். குட்டி யானையை கூட்டத்தில் உள்ள பெண் யானைகள் பராமரித்து வருகின்றன.