​​ ஜம்மு காஷ்மீரில் கல்வீசும் கும்பலில் மாறு வேடத்தில் போலீசாரும் ஊடுருவல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜம்மு காஷ்மீரில் கல்வீசும் கும்பலில் மாறு வேடத்தில் போலீசாரும் ஊடுருவல்

ஜம்மு காஷ்மீரில் கல்வீசும் கும்பலில் மாறு வேடத்தில் போலீசாரும் ஊடுருவல்

Sep 08, 2018 7:01 AM

ஜம்மு காஷ்மீரில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சில் ஈடுபடும் இளைஞர்களை அடையாளம் காண போலீசார் மாறுவேடத்தில் அந்த கல்வீசும் கூட்டத்தில் ஊடுருவியுள்ளனர்.

ஸ்ரீநகரில் ஜம்மா மஸ்ஜித் அருகே கல்வீச்சு சம்பவம் நடைபெற்ற போது, அந்த கூட்டத்தில் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. கூட்டம் சிதறி ஓடியது என்ற போதும் தொடர்ந்து போலீசாரை நோக்கி கற்களை வீசிய இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.

கல்வீசுபவர்களாக நடித்த போலீஸ்காரர்கள் கல்வீசுகிற 2 பேரை அதிரடியாக கைது செய்தனர். அப்போதுதான் போலீசாரும் கல்வீசும் கூட்டத்தில் இருப்பதை அந்த இளைஞர்கள் உணர்ந்தனர்