​​ கும்பல் வன்முறைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் ஏழு நாட்கள் கெடு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கும்பல் வன்முறைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் ஏழு நாட்கள் கெடு

கும்பல் வன்முறைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் ஏழு நாட்கள் கெடு

Sep 08, 2018 6:23 AM

கும்பல் வன்முறைகள் குறித்து மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் ஏழு நாட்கள் கெடு விதித்துள்ளது. கடந்த ஜூலை 17ம் தேதி மாநில அரசுகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வழங்கி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை குறித்து தமிழ்நாடு உள்பட 19 மாநில அரசுகள் இன்னும் பதிலளிக்கவில்லை.

இன்னும் ஏழு நாட்களுக்குள் மாநில அரசுகள் அறிக்கை அளிக்காவிட்டால் அவற்றின் தலைமைச் செயலர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கும்பல் கொலை, பசு பாதுகாப்பாளர் பெயரால் வன்முறை போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்காக சிறப்புச் சட்டம் இயற்றுவது குறித்து ஆய்வு செய்வதற்காக உள்துறை ராஜ்நாத் சிங் தலைமையில் மூத்த அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் தமது மனுவில் தெரிவித்திருந்தார்.